புகை ஒரு பகை
"புண்பட்ட மனதைப் புகைவிட்டு ஆற்றுகிறேன்" என்போர் சிலர். சுருள் சுருளாய் புகைவிட்ட பலர் வாழ்நாளின் இறுதியில் சுருண்டு படுத்துக்கிடப்பது வாழ்க்கையின் வாடிக்கை...
இயேசு கிறிஸ்து வாழ்ந்த காலத்தில் பீடி, சிகரெட் கிடையாது.ஆகவே வேதத்தில் புகைப்பழக்கத்தைப் பற்றி நேரிடியான போதனை இல்லை. எனினும் பொது அறிவின்படி பார்த்தாலும், எல்லா சிகரெட் பெட்டிகளிலும், கீழ்கண்ட வாசகம் உண்டு:
Statutory warning: Smoking is injurious to health.
வேதமும்" பிரியமானவனே, உன் ஆத்துமா வாழ்வது போல் நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கவேண்டும்"(3 யோ 2) என விரும்புகிறது. எனவே புகைப்பது கடவுளின் விருப்பத்திற்க்கு மாறானது.ஆகவேதான் புகைப்போர் பலரது மனசாட்சியும் அவர்களுக்கு உறுத்துதலாய் உள்ளது.
புகைப்பிடிப்போர் பெரும்பாலும் ஒருவித அடிமைத்தனத்துக்குள்தான் இருப்பார்கள்(யோ 8:34).ஆனால் கடவுளின் பிள்ளைகளுக்குரிய உயரிய கோட்பாட்டை திருமறையில் இப்படி வாசிக்கிறோம்:"எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு,ஆனாலும் எல்லாம் தகுதியாய் இருக்காது; எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு, ஆனாலும் நான் எதற்கும் அடிமைப்படமாட்டேன்" (1 கொரி 6:12). தீதாய் தோன்றும் எல்லாவற்றையும் விட்டுவிலகுங்கள் என்றும் திருமறை போதிக்கிறது. புகை நமக்கு பகை!
பலர் இன்று இப்பழக்கத்திலிருந்து மீள முடியாமல் தவிக்கின்றனர். பிரச்சனைக்குத் தீர்வு இதோ:
"இயேசு உங்களை விடுதலையாக்கினால் உண்மையிலே நீங்கள் விடுதலையாவீர்கள்"(யோ 8:36)
தூயாதி தூயவரே, எங்களுக்கும் எங்களை சிற்றியிருப்போருக்கும்
தீமை விளைவிக்கும் எவ்விதப் பழக்கத்தையும்,
எங்களுக்கு எவ்வளவு பிரியமாயிருந்தாலும், விட்டு விலக சக்தி தாரும்!
2 comments:
//எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு,ஆனாலும் எல்லாம் தகுதியாய் இருக்காது; எல்லாவற்றையும் செய்ய எனக்கு உரிமையுண்டு, ஆனாலும் நான் எதற்கும் அடிமைப்படமாட்டேன்//
அம்மு :)
புகைபிடித்தலுக்கு எதிராக வேதாகம விளக்கம் மிகவும் அருமை !! வசனங்கள் அனைத்தும் மிகப்பொருத்தமாக இருக்கிறதே !!! எப்படி இவ்வளவு பொருத்தமான வசனங்களை தேர்தெடுக்கிறீர்கள் ??
அருமையான விளக்கம் !!
//இயேசு உங்களை விடுதலையாக்கினால் உண்மையிலே நீங்கள் விடுதலையாவீர்கள்"(யோ 8:36)//
மெய்யாகவே கிறிஸ்துவினால் மாத்திரமே விடுதலை கிடைக்கும். நாம் ஆண்டவரிடத்தில் ஜெபிக்கும் போது அவர் நமது வாழ்வில் உள்ள பாவங்களிலிருந்து விடுதலை கொடுக்கிறார். வேத விளக்கங்களைக் கொண்டு அருமையான பதிவு அம்மு :)
Post a Comment