Monday, September 24, 2007

இளமை, இனிமை, இறைவனுக்கே!

நீ உன் வாலிப பருவத்தில் உன் சிருஷ்டிகரை நினை' -பிரசங்கி 12:1



இளம் பருவத்தில் வாலிபர்களை இறைவனிடமிருந்து திசைதிருப்ப சாத்தான் எத்தனையோ ஆயுதங்களை பயன் படுத்துகிறான். அவன் உபயோகிக்கும் யுக்திகளில் இன்று பிரதானமானவை internet ம், சினிமா/தொலைக்காட்சி கேளிக்கைகளும், இரவு விடுதிகளின் களியாட்டங்களும் தான்.

வாலிப பருவத்தில் இயற்க்கையாகவே உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பல மாற்றங்கள் நடைபெறும் போது, மேற்சொல்லிய காரியங்கள் எளிதாக வாலிபர்களை தவறு செய்ய தள்ளிவிடுகிறது.


இதனை மேற்கொள்வது எப்படி?

மேற்கொள்வது கஷ்டம்தான்,ஆனால் கர்த்தரால் கூடாத காரியம் ஒன்றுமில்லையே! கர்த்தரின் துணையோடு, வேதவசனங்களின் வழிநடத்துதலோடு எவ்வாறு இச்சோதனைகளை மேற்கொள்ளலாம் என பார்க்கலாமா.......

'வாலிபன் தன் வழியை எதினால் சுத்தம்பண்ணுவான்? உமது வசனத்தின்படி தன்னைக் காத்துக்கொள்கிறதனால்தானே!'

சங்கீதம் 119:9


1. எத்தகைய நண்பர்களுடன் நீங்கள் பழகுகிறீர்கள் என்பது மிகவும் முக்கியம். நண்பர்களுடன் அரட்டை அடிப்பது, விளையாடுவது தவறல்ல,ஆனால் அதிலும் உங்கள் பரிசுத்தத்தை காத்துக் கொல்வது அவசியம்.



'உமக்குப் பயந்து உமது கட்டளைகளைக் கைக்கொள்ளுகிற அனைவருக்கும் நான் தோழ்ன்'


சங்கீதம் 119:63



ஆகாத சம்பாஷனை நல்லொழுக்கத்தைக் கெடுக்கும் என்பதை நினைவில் கொள்க!



2.சோம்பேறிதனம் உங்களை எளிதில் பாவம் செய்ய தூண்டிவிடும், சோம்பேறியின் மூளையை சாத்தான் சீக்கிரமாக ஆக்கிரமித்துக் கொள்வான். அதனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள்.

'சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொள்ளும்' - நீதிமொழிகள் 21:25


இசைப் பயிற்ச்சி, விளையாட்டுப் பயிற்ச்சி போன்றவை உங்களை குதூகலத்துடனும், உற்ச்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.

சோம்பேறித்தனம் தாவீது ராஜாவை எவ்வளவு பெரிய பாவம் செய்ய தூண்டியது பாருங்கள்![II சாமுவேல் 11.2-4]





3.நீங்கள் இன்டர்னெட்டில், தொலைக்காட்ச்சியில் பார்க்கும் காட்ச்சிகளை, இயேசப்பாவும் உங்களோடு சேர்ந்துப் பார்த்து ரசிப்பார் என்று நீங்கள் விசுவாசித்தால், நீங்கள் பார்க்கும் நிகழ்ச்சி உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு எதிரானது அல்ல என்பதை உணர்ந்துக்கொள்ளலாம்.



'தீங்கான காரியத்தை என் கண்முன் வைக்கமாட்டேன், வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது.' - சங்கீதம் 101:3



ஒரு ஆபாச காட்ச்சியையோ, வன்முறை நிகழ்ச்சியையோ நிச்சயம் இயேசப்பா உங்களுடன் சேர்ந்து ரசிக்கமாட்டார் என்பது தெள்ளந்தெளிவாக உங்கள் இருதயத்திற்கு தெரியுமல்லவா???


'வாலிபனே! உன் இளமையில் சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பகட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட;

ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்தில் கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.' - பிரசங்கி 11:9


ஜெபம்:



"அன்புள்ள இயேசப்பா! என் இளமையைக்குறித்து ஒருவனும் என்னை அசட்டைபண்ணாதபடிக்கு, என் வார்த்தையிலும், நடக்கையிலும், அன்பிலும்,ஆவியிலும், விசுவாசத்திலும், கற்பிலும், விசுவாசிகளுக்கு மாதிரியாயிருக்க கற்றுத்தாரும்"

ஆமேன்.



பாடல்:
http://www.tamilchristiansongs.org/media/index.php?option=com_zina&Itemid=26&l=8&p=Fmpb_Songs/Rizia/Chumma.wma&m=1

2 comments:

வெட்டிப்பயல் said...

//சோம்பேறிதனம் உங்களை எளிதில் பாவம் செய்ய தூண்டிவிடும், சோம்பேறியின் மூளையை சாத்தான் சீக்கிரமாக ஆக்கிரமித்துக் கொள்வான். அதனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். 'சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொள்ளும்' - நீதிமொழிகள் 21:25
[Photo] இசைப் பயிற்ச்சி, விளையாட்டுப் பயிற்ச்சி போன்றவை உங்களை குதூகலத்துடனும், உற்ச்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.//

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்...

Ammu said...

\"வெட்டிப்பயல் said...
//சோம்பேறிதனம் உங்களை எளிதில் பாவம் செய்ய தூண்டிவிடும், சோம்பேறியின் மூளையை சாத்தான் சீக்கிரமாக ஆக்கிரமித்துக் கொள்வான். அதனால் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்க கற்றுக் கொள்ளுங்கள். 'சோம்பேறியின் கைகள் வேலைசெய்ய சம்மதியாததினால், அவன் ஆசை அவனைக் கொள்ளும்' - நீதிமொழிகள் 21:25
[Photo] இசைப் பயிற்ச்சி, விளையாட்டுப் பயிற்ச்சி போன்றவை உங்களை குதூகலத்துடனும், உற்ச்சாகத்துடனும் வைத்துக் கொள்ள உதவும்.//

எவ்வளவு சத்தியமான வார்த்தைகள்..."

வெட்டி என் பதிவினை வாசித்து கருத்துக்கள் அளித்தமைக்கு நன்றி.