Tuesday, November 27, 2007

கடவுளுக்குக் கடன்!


"வாரியிறைத்தும் விருத்தியடைவாரும் உண்டு;
அதிகமாய்ப் பிசினித்தனம் பண்ணியும் வறுமையடைவாரும் உண்டு" (நீதி 11:24)

யாருக்கு கொடுக்கவேண்டும்?
தேவையிலுள்ள எவருக்கும் உதவ வேண்டும். தீயோர் மீதும் நல்லோர் மீதும் தமது சூரியனை உதிக்கப்பண்ணும், நீதியுள்ளோர்மீதும் அநீதியுள்ளொர் மீதும் மழையை பொழிபவர் நமது இயேசு அப்பா! [ மத் 5:45]

எவ்வளவு கொடுக்க வேண்டும்?
வேதத்தில் இதற்குச் சட்டமில்லை. ஆனால் "உற்சாகமாய் கொடுக்கிறவனிடத்தில் கடவுள் பிரியமாயிருக்கிறார்: என்றிருக்கிறது
[ 2 கொரி 9:7 ].
இவ்வசனம் எளியவருக்கு உதவுதலியே அடுத்தது.

பிச்சைக்காரர், ஊனமுற்றோர் போன்றொரை அழைத்து அவர்களுக்கு உணவுடை கொடுத்து " எளியோர் பண்டிகை" ஒன்று நாம் கொண்டாடினால் என்ன? எவ்வளவு குதுகலமாயிருக்கும்! வருகிற கிறிஸ்துமஸை அப்படிக் கொண்டாடுங்களேன்!

எளியவருக்கு அள்ளிக் கொடுப்போர் மீது வரும் ஆசீர்வாதங்கள் ஏராளம். அவர்களுக்கு ' பொருளாதார' ஆசீர்வாதம் உண்டு. " ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்: அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்" [ நீதி 19:17]

அப்படியே "உடலுக்கடுத்த" ஆசீர்வாதமும் உண்டு. பசியுள்ளோரோடு உங்கள் அப்பத்தைப் பகிர்ந்து ஆடையில்லாதோரை உடுத்துவிக்கும்போது உங்கள் ' சுகவாழ்வு துளிர்க்கும்" [ ஏசா 58:8]

" ஆன்மீக" ஆசீர்வாதமும் உண்டு, " ஏழைக்களுக்கு கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும்" [ 2 கொரி 9:9,10]. எளியவரோடு ஈடுபாடு கொள்ளும்போது நமது ஆவியும் எளிமையாகிறது.

இறுதியாக, "நித்திய" ஆசீர்வாதம். நற்செயல்களில் செல்வந்தராகவும், தாராளாமாய்க் கொடுக்கிறவர்களாகவும் இருக்கையில் "நித்திய ஜீவனைப் பற்றிக்கொள்ளும்படி.....நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கிறோம்"
[ 1 தீமோ 6:18, 19]

3 comments:

Jones said...

தரித்திரருக்குக் கொடுப்பவன் தாழ்ச்சியடையான்(நீதி 28:27a) என்ற வசனத்தின்படி அனைவரும் நடந்தால் எழை மக்களின் வாழ்வு செழிக்கும். இப்போது ஒரு சில ஆலயங்களில் அந்தப் பகுதியில் உள்ள எழை எளியவர்களுக்கு புத்தாடை வழங்குகிறார்கள், இதனை அனைத்து கிறிஸ்தவர்களும் பின்பற்றினால் கிறிஸ்துமஸ் பண்டிகை எழை எளியவர்களின் மகிழ்ச்சியான பண்டிகையாக இருக்கும்.

Jones said...

I have changed my blog name to http://sathiyavasanam.blogspot.com/ Please visit if you have time.

நவீன் ப்ரகாஷ் said...

//பிச்சைக்காரர், ஊனமுற்றோர் போன்றொரை அழைத்து அவர்களுக்கு உணவுடை கொடுத்து " எளியோர் பண்டிகை" ஒன்று நாம் கொண்டாடினால் என்ன? எவ்வளவு குதுகலமாயிருக்கும்!//

அட மிக நல்ல யோசனையா இருக்கே அம்மு!!!