மன்னிப்போம், மறப்போம்!
உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்..
உங்களை பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள் (மத் 5:44)
சில வேளைகளில் நம் விருப்பு, வெறுப்பு, சுபாவம் இவைளால் நம்மை பகைக்கிறவர்கள் நிறைய பேர் இருக்கலாம். அவ்வித மக்களோடு சமாதனமாயிருப்பது இயலாமல் போகலாம். எனவே தான் "கூடுமானால் உங்களாலானமட்டும் எல்லா மனிதரோடும் சமாதானமாயிருங்கள்" என்கிறது வேதம். (ரோ 12:18).
நம்மீது கர்த்தர் எவ்வளவு பொறுமையாயிருந்தார் என்று எண்ணிப்பார்க்கவேண்டும். எத்தனை முறை நாம் அவரை ஏமாற்றியும் அவர் நம்மை விட்டுவிடவில்லையே. இரக்கத்தில் செல்வந்தராகிய அவர் நாமும் பிறரை குறைந்தது ஏழெழுபது தடவையாவது மன்னிக்க எதிர்பார்க்கிறார்.
இளைஞனாகிய யோசேப்பு தனக்குத் துரோகம்செய்து தன்னைக் குழியில் எறிந்துவிட்ட தனது சகோதரரைக்கூட மன்னித்தது அன்றோ இறைவன் விரும்பும் குணம்?
நமது விரோதிக்களுக்காக ஜெபிக்கவேண்டும் (மத் 5:44). ஜெபமண்ணில் அன்பு தழைத்தோங்கும். நம்மை வெறுக்கும் நபருக்காக ஜெபிக்கத் துவங்குகையில் அவரை நேசிப்பது எளிதாகுகிறது. சாதாரணமாக நம்மால் முடியாத நிலையிலும் எதிர்போரை நேசிக்க அவர் தமது தூயாவியானவர் மூலம் தமது அன்பை நம்மில் ஊற்றுவார்.
பிசாசைக்கூட சபிக்க கடவுள் நம்மை அனுமதிக்கவில்லை(யூதா 9). எவரையும் சொல்லால் பழித்துவிடாதிருங்கள். கசப்பான வேர் இதயத்தில் வேண்டாம் ( எபி 12: 14,15). பழிவாங்குதல் கடவுளுக்கே உரியது. அந்த ஆயுதத்தை உங்கள் கையில் எடுக்காதீர்கள்.நம்மை துன்புருத்துவோருக்கு நன்மையொன்று செய்யத் தருணம் நோக்கியிருப்போம்.
நன்மைக்கு தீமை செய்வது சாத்தானின் பண்பு,
தீமைக்கு தீமை செய்வது மனிதனின் இயல்பு,
தீமைக்கு நன்மை செய்வதோ இறைவனின் மாண்பு!
4 comments:
//நம்மை வெறுக்கும் நபருக்காக ஜெபிக்கத் துவங்குகையில் அவரை நேசிப்பது எளிதாகுகிறது.//
உண்மைதான் அம்மு:))
நம்மை நேசிப்பவரை மேலும்
புரிந்து கொள்ளவும் ஜெபம்
எளிதாக்குகிறது அல்லவா? :))
Dear sis.Ammu, I praise God for your initiative and heart for serving God. God Bless You! Could you please change a word in the third line, you have written மட்னிதரோடும் instead of the right one. I praise & thank God for you, keep serving God with all that you can do for glorifying God. Jesus Loves You! Thanks for sharing! God bless you!
//பழிவாங்குதல் கடவுளுக்கே உரியது.//என்று கிறிஸ்தவ மக்களாகிய நாம் அனைவரும் நினைத்து செயல்பட்டால் நம்மைப் பார்த்து பிற மக்கள் ஆண்டவரண்டை வழிநடத்தப்படுவார்கள்.இதைத் தான் கிறிஸ்துவும் "மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார்" என்று நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். இவற்றை நம்முடைய வாழ்வில் கடைபிடித்து வந்தால் இவ்வுலக ஆசிர்வாதம் மட்டுமின்றி பரலோக வாழ்வையும் காணலாம்.
http://sathiyavasanam.blogspot.com/
god bless this website
please be encouraged by the power of miracles on my website
www.beautyforashes.org.uk
Post a Comment