ஜெபமே ஜீவன்....
கடவுள்மீது நாம் சார்ந்திருக்கிறோம் என்பதைமிகவும் உரிய முறையில் வெளிக்காட்டுவதே ஜெபம்.
ஜெபத்துடன் உபவாசத்தையும் கூட்டிக்கொள்ளும்போது. கடவுள் இல்லாமல் நாம் ஒன்றுமே செய்ய முடியாது என்று அவரிடம் சொல்லுகிறோம்.
ஜெபம் என்பது கடவுளை மாற்றும் கருவியல்ல; அது அவரது திட்டத்துக்குள் நம்மைப் பொருந்தும்படி நம்மை மாற்றும் சாதனம்.
நாம் ஜெபத்தில் தளர்ந்தால் எல்லாப்பகுதிகளிலும் தவறுமாதலால் நமது ஜெபவாழ்வையே பிசாசு முதலாவது குறி வைக்கிறான்.
கடவுளோடுள்ள நமது உறவை ஜெபம் நெருக்கமாக்குவதால் ஜெபம் இனிதாகுகிறது.
எனக்கு விருப்பமானவற்றையெல்லாம் நான் கடவுளிடம் கேட்கிறேன்;
அவரோ எனக்குத் தேவையானவற்றை மட்டுமே எனக்குத் தருகிறார்.
எனவே பதிலளிக்கப்படாத ஜெபங்களுக்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறேன்.
3 comments:
//எனக்கு விருப்பமானவற்றையெல்லாம் நான் கடவுளிடம் கேட்கிறேன்;
அவரோ எனக்குத் தேவையானவற்றை மட்டுமே எனக்குத் தருகிறார்.
//
மிகச் சரியான வார்த்தை.
//எனவே பதிலளிக்கப்படாத ஜெபங்களுக்காகவும் அவருக்கு நன்றி கூறுகிறேன்.//
மிக வித்தியாசமாக உணர்ந்தேன் அம்மு... இப்படியும் ஜெபிக்கலாம் என கற்றுக்கொடுத்திருக்கிறீர்கள் !!! :)
ennai padaitha en dhevanukku nadri
Post a Comment